கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு…

கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கி, புவிசார் குறியீடு பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. பிரசித்தி பெற்ற கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என, கோவில்பட்டி கடலைமிட்டாய் உற்பத்தியாளர்கள் தரப்பில், புவிசார் குறியீடு பதிவுத்துறைக்கு விண்ணப்பிக்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்டு, கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்மூலம், கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு சர்வதேச மதிப்பு கிடைக்கும்.