தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்திற்கு உட்பட்ட ஆரோக்கியபுரத்தில் நான்காம் கட்ட கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு

நாளுக்கு நாள் கொரோனா நோய் தொற்றின் தாக்கம் அதிகமாகி கொண்டு வருவதால் கிராமப் புறங்களில் மக்கள் அச்சத்துடன் காணப்படுகிறார்கள். இந்நிலையியல் கிராமப்புறங்களில் தன்னார்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர் மூலம் இலவச கபசுர குடிநீர், நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை மற்றும் முககவசம் வழங்கப்பட்டு வருகிறது. அதைபோல் கொரோனா அச்சத்தை போக்க இன்று (14/07/2020) காலை 6.30 மணியளவில் நம்ம ஊரு ஆரோக்கியபுரம் வாட்ஸ் அப் குழு சார்பில் இலவச கபசுரக் குடிநீர் ஆரோக்கியநாதர் ஆலயம் முன்பு நான்காம் கட்ட கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஊா் பொியவா் குணசீலன் அவா்கள் தலைமை தாங்கி நிகழ்வினை தொடங்கி வைத்தார்கள். ஊா் பஞ்சாயத்து உறுப்பினா் மிக்கேல் அருள் ஸ்டாலின் அவா்கள் மற்றும் தினேஷ் மற்றும் அபினாஷ் ஆகியோர் களப்பணியாற்றினாா்கள். பொதுமக்களும், பணியாற்றும் நண்பர்களும் சமூக இடைவெளியை பின்பற்றியும், முககவசம் அணிந்தும் கபசுரக் குடிநீரை பெற்றுச் சென்றனா்.