திமுகவின் முன்னாள் எம்எல்ஏ அதிமுகவில் இணைந்தார்கள்…

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவரும், விளாத்திகுளம் தொகுதி திமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.பெருமாள் மற்றும் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தலைவர் எம்.கே.பி. வரதராஜபெருமாள் ஆகியோர் நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அவர் முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைந்து கொண்டனர். அப்போது தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளரும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் ராஜு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் சண்முகம் எம்எல்ஏ, சின்னப்பன் எம்.எல்.ஏ ஆகியோர் உடன் இருந்தனர்.