மீன்பிடி தடைக்காலம் முன்கூட்டியே முடிவுக்கு வருகிறது

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மீன்பிடி தடைக்காலம் குறைக்கபட்டுள்ளது.மத்திய மீன்வள துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு மீன்வள அமைச்சகம், வங்க கடல் மீன்பிடி தடை கால அளவை 61 நாட்களிலிருந்து 47 நாட்களாக குறைத்து உத்தரவிட்டுள்ளது..கொரானா ஊரடங்கு காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை, பின்னர் ஆண்டு மீன்பிடி தடைக்காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த ஆண்டிற்கான மீன்பிடி தடை காலத்தை ஏப்ரல் 15 முதல் மே 31 வரையிலான 47 நாட்களாக குறைத்துக் கொள்வதாக மத்திய மீன்வள அமைச்சகம் அறிவித்துள்ளது.அதேபோல், மேற்கு கடல் பகுதியில் ஜூன் 15 முதல் ஜூலை 31 வரை 47 நாட்களாக தடைக்காலம் குறைக்கப்பட்டுள்ளது.இதற்கான உத்தரவை மத்திய மீன்வள அமைச்சக உதவி ஆணையர் டாக்டர் சஞ்சய் பாண்டே பிறப்பித்துள்ளார்.