இன்று முதல் 6 நாட்கள் கீழஈரால் கிராமத்தில் முழு ஊரடங்கு

தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் அருகிலுள்ள, தூத்துக்குடி- மதுரை தேசியநெடுஞ்சாலயில் அமைந்துள்ள கீழஈரால் கிராமத்தில், ஒருவருக்கு கொரானா தொற்று உறுதிசெய்யப்பட்டது. மேலும் பரவும் சூழல் ஏற்பட்டதால் ஊராட்சி நிர்வாகமும்,வியாபாரிகள் சங்கமும் இணைந்து ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் முழுவதும் 6 நாட்கள் முழு ஊரடங்கு நடத்த முடிவு செய்தனர். அதன்படி 7-7-2020 முதல் 12-7-2020 ஞாயிறு வரை முழு ஊரடங்கு அமுல்படுத்த உள்ளனர். ஊராட்சி தலைவர் பச்சைபாண்டி நாடார்,வியாபாரிகள் சங்கத்தலைவர், கிராம ஆலோசனைக்குழு தலைவர் சீனிவாசன் மிட்டாய்கடை அதிபர் சீனிச்சாமிநாடார்,ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், வியாபாரப்பிரமுகர்கள்,கலந்து கொண்டு முடிவெடுக்கப்பட்டது. ஏற்கனவே கீழ ஈராலில் பொது ஊரடங்கு அமுலில் இருந்தபோது 1250 குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி உட்பட நிவாரணம் செல்வந்தர்கள், முக்கியபிரமுகர்களிடம் வசூல் செய்து வழங்கினர்.