காணொளி காட்சி மூலம் சாத்தான்குளத்தில் உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு ஆறுதல்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் சரத்குமார் அவர்கள், சாத்தான்குளத்தில் உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்தினரோடு காணொளி காட்சி மூலம் உரையாற்றி பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார் அதன்பின் ஜெயராஜ் அவர்களின் மனைவி மற்றும் மகள்கள் இடத்தில் சட்டரீதியான அனைத்து தேவைகளுக்கு நான் உதவியாகவும் பொருளாதார தேவைக்கு உதவியாகவும் இருப்பேன் என்றும் குடும்பத்தின் மூத்த சகோதரன் போன்று இருந்து அனைத்து உதவிகளையும் செய்வேன் என்றும் மற்றும் உங்களுக்கு எந்த ஒரு உதவி வேண்டும் என்றாலும் என்னை அழைத்தால் எங்களுடைய இயக்கத்தின் நிர்வாகிகள் உங்களுக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருப்பார்கள் என்று கூறினார். கட்சியின் துணை பொதுச் செயலாளர் திரு. சுந்தர் அவர்கள் தலைமையில் மாநில இளைஞரணி துணை செயலாளர் குரூஸ் திவாகர், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் தயாளன், தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் வில்சன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அவைத்தலைவர் திருமதி.தயா, சாத்தான்குளம் ஒன்றியச் செயலாளர் ஜான் ராஜா, மாவட்ட இளைஞரணி செயலாளர் சுதாகர், மாவட்ட மகளிரணி செயலாளர் திருமதி.ஜெயந்தி, திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர்கள் சோடா ரவி, உடன்குடிஒன்றிய செயலாளர் அம்மன் அழகேசன், ஆழ்வை ஒன்றிய செயலாளர் லென்சிங் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.