உலகப் புகழ்பெற்ற மதுரையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மாலை 4 மணியளவில் நிறைவடைந்தது. இதில் 16 காளைகளை அடக்கி பிடித்து முதலிடத்தைப் பெற்ற ரஞ்சித் குமாருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. அதேபோல 14 காளைகளைப்பிடித்த கார்த்திக் இரண்டாவது பரிசையும், 13 காளைகளை தழுவி பிடித்த கணேசன் மூன்றாவது பரிசையும் வென்றுள்ளனர்.
இதிலும் சிறந்த காளையாக மதுரை குலமங்கலம் மார்நாடு காளை 12 மதிப்பெண் பெற்று முதலிடம்; புதுக்கோட்டை ஆய்வாளர் அனுராதா காளைக்கு 10 மதிப்பெண்; மதுரை ஜி.ஆர் கார்த்திக் காளை 9.60 மதிப்பெண் பெற்று 3ம் இடம். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன் காளைகளும் தேர்வு செய்யப்பட்டன.
-seithikkural