தமிழக அரசனின் போட்டித்தேர்வு வழிகாட்டி: தூத்துக்குடி

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மூலம் மத்திய, மாநில அரசுகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களால் அறிவிக்கப்படும் போட்டித்தேர்வுகளுக்கு, தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் சிறப்பு வல்லுனர்களை கொண்டு தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில், பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

தன்னார்வ பயிலும் வட்ட மாணவர்கள் தங்கள் இருப்பிடத்திலேயே பயிற்சி பெற வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தை பார்க்கலாம். அதில் காணொலி காட்சி மூலம் கற்றல், பாடக்குறிப்புகள், புத்தகங்கள், போட்டித்தேர்வுக்கான பயிற்சிகள் மற்றும் மாதிரி வினாத்தாள் போன்றவை இடம்பெற்று உள்ளன.