காய்கறி விற்பனை நிலையமாக மாற்ற உள்ள பேருந்து நிலையத்தினை ஆட்சியர் ஆய்வு செய்தார்

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நகராட்சியில் காய்கறி விற்பனை நிலையமாக மாற்ற உள்ள பேருந்து நிலையத்தினை சுத்தப்படுத்தி கிருமிநாசினி தெளிக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி இ.ஆ.ப அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அருகில் திருச்செந்தூர் கோட்டாட்சியர் செல்வி தனபிரியா, திருச்செந்தூர் வட்டாட்சியர் திரு.தங்கராஜ், திருச்செந்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் திரு.கோபால் ஆகியோர் உள்ளனர்.