கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு 500 கிலோ எடை கொண்ட கிறிஸ்துமஸ் 2019 கேக் மிக்சிங் திருவிழா நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம்

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு 500 கிலோ எடை கொண்ட கிறிஸ்துமஸ் 2019 கேக் மிக்சிங் திருவிழா நடைபெற்றது.

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு விதவிதமாக கேக் தயாரிக்கும் பணிகள் தொடங்கி விட்டது. கிறிஸ்துமஸ் தொடங்குவதற்கு ஒருமாதத்திற்கு முன்பாக கேக் மிக்சிங் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதையொட்டி தூத்துக்குடி டி.எஸ்.எப். கிராண்ட் பிளாசா ஹோட்டலில் கேக் மிக்சிங் திருவிழா நடைபெற்றது.

இந்த கேக் மிக்சிங் என்பது 17வது நூற்றாண்டில் ஐரோப்பாவில் தொடங்கப்பட்டது. கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்பதற்கு உலர்ந்த முந்திரிப் பழங்கள், பாதாம் பருப்புகள், செர்ரி பழம், மற்றும் பலதரப்பட்ட ஜாம் வகைகள் இத்துடன் உயர்தர மதுபானங்களையும் சேர்க்க வேண்டும். 

இந்த உலர்ந்த பழங்களிலும், மதுபானங்களிலும் உள்ள இனிப்புதன்மையானது கிறிஸ்துமஸ் கேக் கெடாமல் பாதுகாக்கிறது. இறுதியாக உயர்தரமான மதுபானங்கள், பழரசங்கள், தேன் ஆகியவை நன்றாக ஊறுவதற்கு ஏதுவாக சேர்க்கப்படுகிறது. 

500 கிலோ எடை கொண்ட கிறிஸ்துமஸ் 2019 கேக்

பின்னர் பழக்கலவையானது மிகப்பெரிய காற்று புகாத கொள்கலனில் வைத்து மூடப்படுகிறது. பழக்கலவையானது நன்றாக ஊறுவதற்கு ஏதுவாக வாரம் ஒருமுறை திறக்கப்பட்டு நன்றாக கலக்கப்பட்டு கேக் தயாரிக்கப்படுகிறது.