மறைந்த தமிழக முதலமைச்சர் பாரத ரத்னா எம்.ஜி.ஆர் 100வது பிறந்த நாளை மத்திய அரசு அவரது உருவம் பொறித்த நாணயம் வெளியிடுகிறது.
தூத்துக்குடி பாரத ரத்னா எம்.ஜி.ஆர் நூற்றாண்டு பிறந்த நாள் குழு கடந்த சில ஆண்டுகளாக அவரது உருவம் பொறித்த சிறப்பு நாணயம் வெளியிட மத்திய அரசுக்கு பல்வேறு கோரிக்கை மனுக்களை அனுப்பி வந்தது.
பாரத ரத்னா எம்.ஜி’ ஆர் உருவம் பொறித்த சிறப்பு தபால் தலையை மத்திய அரசு கெளரவித்தது.
அது போல சென்னை சென்ட்ரல் நிலையத்திற்கு பாரத ரத்னா எம்.ஜி.ஆர் பெயரை சூட்டமாநில எம்.ஜி.ஆர் பக்தர்கள் பாசறை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றி சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி தலைமையில் முதல்வர் எடப்பாடி ேக.பழனிச்சாமி அவர்களிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு சென்னை சென்ட்ரல் நிலையத்திற்கு பாரத ரத்னா எம்.ஜி.ஆர் பெயரை சூட்டியது.
பாரத ரத்னா எம்.ஜி.ஆர் உருவம் பொறித்த நாணயம் மட்டும் மத்திய அரசு வெளியிடவில்லை. தொடர்ந்து எம் .ஜி.ஆர் மன்றங்கள் மத்திய அரசை வற்புறுத்தி வந்ததால் பாரத ரத்னா எம்.ஜி.ஆர் உருவம் நாணயம் வெளியிட மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.
மத்திய அரசு வெளியிடும் பாரத ரத்னா எம்.ஜி.ஆர் சிறப்பு நாணயம் விலை ரூபாய் 3055 ஆகும். இந்த நாணயத்தில் பல்வேறு உலோகங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
பாரத ரத்னா எம்.ஜி.ஆர் சிறப்பு நாணயம் பெற கடைசி நாள் 29.2.2020 ஆகும். தேவைக்கு ஏற்ப தான் நாணயம் வெளியீடு டப்படுகிறது.இந்த நாணயம் பெற இந்திய அரசு மின்ட் மும்பை முகவரிக்கு அனுப்பலாம் அல்லது Security printing and minting corporation of India Ltd
spmcil.com என்ற இமெயில் முகவரிக்கு தொடர்பு கொண்டு பணம் அனுப்பலாம்.
தூத்துக்குடியில் பாரத ரத்னா எம் ஜி ஆர் நூற்றாண்டு பிறந்த நாள் குழு அமைப்பாளர் எஸ்.மோகன் தலைமையில் 25 பேர் சிறப்பு நாணயம் பெற பணம் செலுத்தியுள்ளார்கள்.