நாளை காலை 5 மணி முதல் பேருந்துகள் இயக்கம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அறிவிப்பு

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள படி திருநெல்வேலி மாவட்டத்தில் பொது பேருந்து போக்குவரத்தை 01.06.2020 முதல் நடைமுறைப்படுத்தும் பொருட்டு திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களை உள்ளடக்கி VI -வது மண்டலத்தின் பகுதிகள் அருகிலுள்ள மற்ற மாவட்டங்கள் எல்லை பகுதி வரையிலும் பேருந்துகள் காலை 05.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை இயக்கம் செய்யப்படும்.

தூத்துக்குடி மாவட்ட பகுதிகளில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்(திலி) லிட் தூத்துக்குடி மண்டலம் மூலம் 50 விழுக்காடு பேருந்துகளும், 60 விழுக்காடு பயணிகளுடன் 57 நகர்ப் பேருந்துகள் மற்றும் 94 புறநகர்ப் பேருந்துகள், ஆக மொத்தம் 151 பேருந்துகள் இயக்கம் செய்யப்படும்.

இவ்வழித்தடங்களில் இயக்கப்படும் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் பாதுகாப்பு முக கவசம் அணிந்தும், பேருந்தில் பின்படிக்கட்டில் ஏறும்போதும், முன்படிக்கட்டில் இறங்கும் போதும், மற்றும் பேருந்தினுள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் பொதுமக்கள் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறது.