யூடியூப் வீடியோ மூலம் ரூ.185 கோடி சம்பாதித்த சிறுவன்!

அமெரிக்காவைச் சேர்ந்த எட்டு வயது சிறுவன் ரியான் காஜி 2015ம் ஆண்டு ரியான்ஸ் வேர்ல்ட் என்ற பெயரில் யூடியூப் வீடியோ சேனலை தொடங்கினான். அதில் புதிதாக அறிமுகம் ஆகும் விளையாட்டுப் பொருட்களை இந்த சிறுவன் விளையாடி அது பற்றிய தன்னுடைய அனுபவங்களை ஷேர் செய்வான். இந்த வீடியோவை உலகம் முழுக்க உள்ள மக்கள் பார்த்து வருகின்றனர். இதனால், சிறுவனுக்கு கோடிக் கணக்கில் பணம் கிடைக்க ஆரம்பித்தது. இந்த நிலையில் யூடியூப் மூலம் பணம் ஈட்டியவர்கள் பட்டியலை பிரபல ஃபேர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில், ரியான் காஜி முதல் இடத்தைப் பிடித்துள்ளான். இந்த ஆண்டு இதுவரை அவன் ரூ.185 கோடி சம்பாதித்துள்ளான்.