தூத்துக்குடியில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்ற படகு திடீர் கவிழ்ந்தது

தூத்துக்குடி திரேஸ்புரம் மீனவர்கள் மீன் பிடிக்க சென்ற படகுநேற்று இரவு கவிழ்ந்தது.திரேஸ்புரத்தில் இருந்து 15 நாட்டிகல் மைல் தொலைவில் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, திடீர் என பயங்கர காற்று வீசியதில் படகு கவிழ்ந்து அதில் மீன் பிடித்து கொண்டிருந்த இருந்த திரேஸ்புரத்தை சேர்ந்த மீனவர்கள் பெர்க்மான்ஸ் வினோத் சின்ன வேல்ராஜ் சின்னராஜ் மற்றோரு வினோத் ஆகியோர் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தனர்.அந்த வழியாக மீன்பிடிக்க வந்த தருவைகுளம் மீனவர்கள் அவர்களை மீட்டு கரைசேர்த்தனர்.கடலில் தத்தளித்த மீனவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பின்னர் அவர்களை, அஇஅதிமுக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் உயர்திரு சி த செல்லப்பாண்டியன் அவர்கள், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மீனவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்கள். பின்னர் அரசு மருத்துவமனை உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி அவர்களிடமும், உதவி உறைவிட மருத்துவர் திரு ஜெயபாண்டியன் அவர்களிடமும், மீனவர்களின் நலன் பற்றி விசாரித்து தகுந்த சிகிச்சை அளிக்க கேட்டுக்கொண்டார் மேலும் அவர்களுடன், நெல்லை தூத்துக்குடி மீனவர் கூட்டுறவு இணைய தலைவர் கிழக்கு பகுதி செயலாளர் திரு பி சேவியர் அவர்கள், மேற்பகுதி கழகச் செயலாளர் திரு ஏ முருகன் அவர்கள், முன்னாள் நகர அவைத்தலைவர் பட்ட கழகச் செயலாளர் திரு பெருமாள் அவர்கள், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி திரு பி மூர்த்தி அவர்கள், முத்து கூட்டுறவு சங்க தலைவர் திரு இசக்கி முத்து அவர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.