சமநிலை

மாஸ்டராகவும், குழந்தையாகவும் சரிசமமாக இருப்பதில், சமநிலை பேணுபவருக்கே வெற்றி கிடைக்கின்றது.


சிந்திக்க வேண்டிய கருத்து:
நாம் என்ன பேசிக்கொண்டிருக்கின்றோம் என்பதை பற்றி, நமக்கு உறுதியாக தெரியாவிட்டால், நாம் அரிதாகவே அறிவுரை வழங்குகின்றோம். ஆனால் நாம் ஒரு கருத்தை தெரிவிக்கும்போது, மற்றவர் அதை செயல்படுத்தவேண்டும் என எதிர்பார்கின்றோம். அவர்கள் அதை செயல்படுத்த முடிவெடுக்காதபோது, பெரும்பாலும், நாம் அவற்றை விமர்சனமாக கருதுகின்றோம் அல்லது அவர்கள் நம்மை நம்பவில்லை என புரிந்துக்கொள்கின்றோம்.


செயல்முறை:
நான் மாஸ்டராகவும், குழந்தையாகவும் இருப்பதில் முழுமையான சமநிலை பேணுவது அவசியம். ஒரு மாஸ்டராக, என்னால் மற்றவர்களுக்கு அறிவுரை வழங்க முடிகின்றது. ஆனால், நான் அறிவுரையை பெறும்போது, குழந்தையாக இருக்கும் உணர்வை பேணுவது அவசியமாகும். அதாவது, புண்படாமல், மற்றவர்களின் கருத்தையும் விமர்சனத்தையும் ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாகும்.