மீண்டும் சரிவில் ஆட்டோமொபைல் துறை.

ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டிலும் ஆட்டோமொபைல் துறை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.  கடந்த ஓராண்டாகவே நாடு முழுவதிலும் ஆட்டோமொபைல் துறையில் மந்த நிலை ஏற்பட்டுள்ளது, இந்த நிலையில் நடப்பு காலாண்டிலும் அது தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு காலாண்டில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் 16 சதவீதம் முதல் 37 சதவீதம் வரை வீழ்ச்சியை சந்தித்துள்ளன. பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான மாருதியின் விற்பனை 26.7 சதவீதம் சரிந்துள்ளதாகவும் அதே போன்று பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் விற்பனையும் 31 சதவீதம், சரிந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.   பணவீக்கம் போன்ற காரணத்தால் தற்போது வரை ஆட்டோ மொபைல் துறை சரிவை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.
அண்மையில் குறைக்கப்பட்ட வரி விகிதம் நடந்து முடிந்த காலாண்டில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.