டெங்குவினை தடக்க சிறுவர்களின் முயற்சி – கிருஷ்ணகிரி

தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தாங்கரையை அடுத்துள்ள எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் கொசு தொல்லையானது இருந்து வந்துள்ளது.  இது குறித்து பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த விதமான பலனும் இல்லாமல் இருந்தால் அதே பகுதியில் வசித்து வரும் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சார்ந்த சூர்யா., பிரதீப்., ஷாஜகான் மற்றும் விஷ்வா ஆகிய நான்கு சிறுவர்கள் ஒன்று சேர்ந்து அப்பகுதி மக்களிடையே வீடு வீடாக சென்று மனுவில் கையொப்பம் பெற்று., இதன் நகல்களை தேர்வுநிலை பேரூராட்சி ஊழியர்களிடம் அளித்துள்ளனர். அந்த மனுவில் சிறுவர்கள் கூறியிருப்பதாவது., எங்களின் தோழன் தர்சன் என்பவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு எங்களை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதனைப்போன்று மீண்டும் யாரும் எங்களை பிரிந்து செல்ல கூடாது, இதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளனர்.  சிறுவர்களின் இச்செயலால் மக்கள் மத்தியில் பாராட்டுப் பெற்று வருகிறது.