ஆயுட்கால சிறைவாசிகளின் விடுதலைத் தொடர்பாக தமிழர் விடுதலைக் கொற்றம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு

ஆயுட்கால சிறைவாசிகளின் விடுதலைத் தொடர்பாக தமிழர் விடுதலைக் கொற்றம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது,

மேலும் அம்மனுவில் கூறியதாவது, தமிழ்நாட்டுச் சிறைச்சாலைகளில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக வாடிக் கொண்டிருக்கும் ஆயுட்கால சிறையாளிகளை அருளன்புடன் (கருணை அடிப்படையில்) விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்தியும் தமிழ்நாடு சட்டப் பேரவையில் பலமுறை நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் படியும் ராஜீவ் காந்தி மரண வழக்கில் கைது செய்யப்பட்டு 10 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன், முருகன் சாந்தன், நளினி, இராபட்பயாசு, செயக்குமார், இரவிச்சந்திரன் ஆகியோரை விடுதலை செய்ய வேண்டியும் இருபத்தைந்து ஆண்டுக் காலமாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இஸ்லாமியர்களையும் தண்டனை முடிந்து 10 ஆண்டுகளைக் கடந்த சிறைவாசிகள் அனைவரையும் அருள் உள்ளத்தோடும் மனிதநேய அன்புள்ளத்தோடும் விடுதலை செய்ய தமிழக அரசு முன் வர வேண்டுமென, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி முன்னெடுக்கும் இந்த கோரிக்கைளை எமது தமிழர் விடுதலைக் கொற்றம் கட்சியும் வலியுறுத்துகின்றது. ஆகையால் மேற்படி கோரிக்கைகளை கனிவுடன் ஆய்வுக்கு உட்படுத்திட மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை கேட்டுக் கொள்கிறோம் என அம்மனுவில் கூறப்பட்டிருந்தது.