தளபதி 64 படத்தில் 96 குட்டி த்ரிஷா

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகரான விஜய் பிகில் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 64வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பேட்ட பட நடிகை மாளவிகா மோகன் நடிக்கிறார். வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க உடன் மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ், சாந்தனு, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.சேவியர் பிரிட்டோ பிலிம் கிரியேட்டர்  நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது.

இதறகிடையில் ஆன்ட்ரியா விஜய்க்கு வில்லியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியது. இந்நிலையில் தற்போது 96 படத்தில் குட்டி ஜானுவாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த கௌரி தளபதி 64 படத்தில் நடிக்கவிருக்கிறாராம். 

இது குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், என்னிடம் இது உண்மையா என்று கேட்ட பலருக்கும் இது உண்மைதான். ஆம், நான் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 64 படத்தில் நடிக்கவிருப்பது மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது. உங்கள் ஆசீர்வாதங்களும் பிரார்த்தனைகளும் தேவை! என பதிவிட்டுள்ளார். இந்த பதிவை கண்ட ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

Credits : webdunia