நாளை முதல் காலவரையின்றி ஜவுளி கடைகள் மூடல் : தூத்துக்குடி

தூத்துக்குடி ஜவுளி ரெடிமேட் வியாபாரிகள் சங்க கூட்டம்  செயலாளர் சுரேஷ் தலைமையில்  டிஏ திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட நிர்வாகம், ஜவுளி கடை வியாபாரிகளை அழைத்து பேசியதன் பேரில் 2 மாடிக்கு மேல் அனைத்து ஜவுளி கடைகளையும் மறு உத்தரவு வரும் வரை அடைப்பது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் பொருளாளர் ஈஸ்வரன், டிஏ தெய்வநாயகம், அபிராமி சந்திரசேகர், சக்திகணேஷ் ஆதி நாராயணன் உட்பட அனைத்து ஜவுளி கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.