மாநகர பகுதியில் திறக்கப்பட்ட ஜவுளிக்கடைகள் மூடல் : தூத்துக்குடி

கரோனா ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டதால் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் நேற்று காலை திறக்கப்பட்டன. அதில் தூத்துக்குடி மாநகர பகுதியில் உள்ள சிறிய ஜவுளிக்கடைகளும் திறக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில் நேற்று மாலையில் மாநகராட்சி சார்பில் ஜவுளிக்கடைகளை திறக்க அனுமதி இல்லை என்று ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு கொடுக்கப்பட்டது. இதனால் ஜவுளிக்கடை உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 
இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள், ஜவுளிக்கடை உரிமையாளர்களை அழைத்து பேசினர். அப்போது, ஊரகப்பகுதிகளில் மட்டுமே ஜவுளிக்கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்து உள்ளது. மாநகர பகுதியில் அனுமதி இல்லை. ஆகையால் ஜவுளிக்கடைகளை திறக்கக்கூடாது என்று அறிவுறுத்தினர். இதனால் ஜவுளிக்கடைகள் மீண்டும் மூடப்பட்டன.