குண்டுவெடிப்பு நடத்த திட்டமிட்டிருந்த 3 தீவிரவாதிகள் கைது – டெல்லி

அஸ்ஸாம் மாநிலம் கோல்பாரா பகுதியில் ரகசிய தகவலின்பேரில் டெல்லி காவல்துறை சிறப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்திய போது, அங்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பால் ஈர்க்கப்பட்டு புதிய அமைப்பு தொடங்கிய 3 தீவிரவாதிகளை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்து வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் கருவிகள் உள்ளிட்டவற்றையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். அவர்களை விசாரித்த போது கைது செய்யப்பட்ட 3 பேரும் அஸ்ஸாமிலும், டெல்லியிலும் குண்டுவெடிப்பு நிகழ்த்த திட்டமிட்டிருந்தது தெரியவந்தது, தற்போது அவர்கள் கைது செய்யப்பட்டு விட்டதால் தாக்குதல் சதி முறியடிக்கப்பட்டு விட்டதாகவும் டெல்லி காவல்துறை துணை ஆணையர் பிரமோத் குஸ்வாஹா தெரிவித்துள்ளார்.