தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பத்து பாசிட்டிவ் நோயாளிகள்

இன்றைய நிலவரப்படி பத்து பாசிட்டிவ் நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஐஎம்சியூ வில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் தான் சென்னையிலிருந்து வந்ததாக கூறியுள்ளார். இதனால் இன்று அவருக்கு கொரானா பரிசோதனை செய்யப்பட்டதில் கொரானா நோய் தொற்று உறுதியாகியுள்ளது.

நோயாளிகளை டாக்டர்கள் முதல் சுகாதாரப் பணியாளர்கள் வரை கையாண்ட அனைத்து மக்களும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். தேவையான கிருமிநாசினி பணிகள் இன்று செய்யப்பட்டுள்ளன. யாரும் பதற்றம் அடைய தேவையில்லை. டீன் தலைமையிலான குழு தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறது.