தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த பெண் ஊழியருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதனால் அந்த மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு அந்த மருத்துவமனையில் முழுவதும் கடந்த ஒரு வாரமாக கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்தது. தற்போது இந்த பணிகள் முடிக்கப்பட்டு மருத்துவமனையை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதற்கான முதல் கட்ட ஆய்வு அதன்படி கடந்த 17-ம் தேதி மேற்கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று 2-வது கட்டமாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் ராஜசேகர் தலைமையிலான மருத்துவர்கள் குழுவினர், தூத்துக்குடி மாநகர நல அலுவலர் அருண்குமார் முன்னிலையில் ஆய்வு நடத்தினர். நேற்று முழுமையாக ஆய்வு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மருத்துவமனை செயல்படுவதற்கான சான்றிதழ் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து மீண்டும் மருத்துவமனை செயல்பாட்டுக்கு வர உள்ளது.
