கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த வயது விவரக்குறிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த வயது விவரக்குறிப்பு பகுப்பாய்வை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர்  லாவ் அகர்வால், தகவல் வெளியிட்டார். அதில் இதுவரை 0-20 வயதுக்கு இடைப்பட்டவர்கள் 9 சதவீத பாதித்து உள்ளனர். 21 முதல் 40 வயது வரை இடைப்பட்டவர்கள் 42 சதவீத பாதித்து உள்ளனர். 33 சதவீத வழக்குகள் 41 முதல் 60 வயது வரையும் 17 சதவீத வழக்குகள் 60 வயதுக்கு மேல் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளன. 

நாட்டில் 2,902 கொரோனா பாதிப்புகளில் 58 நோயாளிகள் ஆபத்தானவர்கள். இவற்றில் பெரும்பாலானவை மத்தியப் பிரதேசம், டெல்லி மற்றும் கேரளாவில் உள்ளன. “வயதானவர்கள் மற்றும் கொமொர்பிட் நிலைமை உள்ளவர்கள் எளிதாக தொற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். மேலும், இருதய மற்றும் சிறுநீரக பிரச்சினைகள் உள்ளவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே இவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகளின் விளைவு இரு மடங்கு மிகக் குறைவு தான். இருப்பினும், தொற்று நோய்களை எதிர்த்துப் போராடுவதிலும், அன்றாட யுத்தத்தை நடத்துவதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.