வரி வசூல் முறைகேடு – தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரி உட்பட 2 பேர் சஸ்பென்ட்

மாநகராட்சிக்கு வர வேண்டிய வரி வருவாயில் முறைகேடு செய்ததாக தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரி உட்பட 2 பேரை மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன் சஸ்பென்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாநகராட்சியில் நிர்வாக அலுவலர் பொறுப்பில் இருந்தவர் பாலசுந்தரம், இளநிலை உதவியாளராக இருந்தவர் சுமித்ரா, இருவர் மீதும் மாநகராட்சி மார்கெட் மற்றும் தனியாருக்கு சொந்தமான கடைகளில் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் வகையில், வரியை குறைத்து நிர்ணயித்து மோசடியில் ஈடுபட்ட்டது, வசூலான வரி பணத்தை மாநகராட்சிக்கு செலுத்தாமல் இருந்தது என பல்வேறு புகார்கள் வந்ததையடுத்து அது பற்றி விசாரனை செய்த மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன், விசாரனையின் முடிவில் இருவரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

துணிச்சலான அதிகாரி, நேர்மையான அதிகாரி என பெயரெடுத்த மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலனின் இந்த அதிரடி நடவடிக்கை, ஊழல், மற்றும் முறைகேட்டில் ஈடுபட்டு வரும் சில மாநகராட்சி ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.