தட்கல் புதிய கூடுதல் மின்பளு திட்டம் : அரசு விவசாயிகளுக்கு அழைப்பு

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் கூடுதல் மின்பளு திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக திருநெல்வேலி மண்டல தலைமை பொறியாளர் பொறிஞர் கி.செல்வகுமார் அவர்கள் அலுவலக செய்திக்குறிப்பில்: அனைத்து விவசாய மின் இணைப்புகளிலும் கூடுதலாக மின்பளு வழங்குவதற்காக தமிழ்நாடு அரசு “தட்கல் புதிய கூடுதல் மின்பளு திட்டம் 2020-2021” எனும் புதிய திட்டத்தினை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின்படி ஏற்கனவே உள்ள விவசாய மின் இணைப்பில் அனுமதிக்கப்பட்ட மின்பளு மற்றும் கூடுதலாக தேவைப்படும் மின்பளு சேர்த்து 15HPக்கு மிகாமல் பெற்றுக்கொள்ளலாம்.

இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விருப்பம் உள்ள திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்ட விவசாய பெருமக்கள் தங்கள் பகுதிக்குட்பட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் 30.06.2020க்குள் உரிய விண்ணப்பம் செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விபரங்களுக்கு தங்கள் பகுதிக்குட்பட்ட செயற்பொறியாளரை (விநியோகம்) அணுக கேட்டுக்கொள்ளப்படுகிறது.