மதுபானக்கூடங்கள் மூடல் : ஆட்சியர் அதிரடி உத்தரவு

தமிழக முதலமைச்சர் உத்தரவு மற்றும் சென்னை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைதுறை ஆணையாளர் உத்தரவு படி கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்நடவடிக்கைகள் தொடர்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடையுடன் செயல்பட்டு வரும் மதுபானக்கூடங்கள் (115/145), மனமகிழ்மன்றம் (எப்.எல்.2-1) மற்றும் உணவு விடுதியுடன் கூடிய மதுபானக் கூடங்கள் (எப்.எல்.3 -15) ஆகியவை 17.03.2020 முதல் 31.03.2020 வரை மூடப்பட்டிருக்க வேண்டும். மேலும் குறிப்பிட்ட தினங்களில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியபட்டால் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்கச் சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி  தெரிவித்துள்ளார்.