தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு விடுப்பு கிடையாது : பள்ளிக் கல்வித்துறை

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மருத்துவ காரணங்களைத் தவிர பிற காரணங்களுக்காக விடுப்பு எடுக்கக் கூடாது என பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் உள்ள 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் மொத்தம் 2.25 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். பொது முடக்கம் காரணமாக கடந்த ஏப்ரல் முதல் வாரத்திலிருந்து அவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் வெளி மாவட்டங்களுக்குச் சென்ற ஆசிரியர்கள் வரும் 21-ஆம் தேதிக்குள் தாங்கள் பணியாற்றும் மாவட்டங்களுக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள், மருத்துவக் காரணங்களைத் தவிர பிற காரணங்களுக்காக விடுப்பு எடுக்கக் கூடாது என அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.