கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து : மதுரை

தமிழக முழுவதும் கொரோனா தொற்று பரவாமல் இருக்க  தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மதுரையில் உலக புகழ்பெற்ற கள்ளழகர் வைகை  ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது .கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் இந்த ஆண்டு மதுரை சித்திரை திருவிழாவும்  ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது . மே 4-ந் தேதி மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடைபெறும் என்றும், ஆனால் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகள் இணையதளத்தில் ஒளிபரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .