தமிழக அமைச்சரின் உதவியாளர் விபத்தில் பலி!!!

தமிழக அமைச்சர் சி விஜயபாஸ்கரின் நேர்முக உதவியாளர் விபத்தில் சிக்கி பலியாகியிருப்பதாக வெளிவந்துள்ள தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுதமிழக அமைச்சர் சி விஜயபாஸ்கரின் நேர்முக உதவியாளர் வெங்கடேசன் அமைச்சரின் உதவியாளராக மட்டுமின்றி அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவராகவும் இருந்தார். சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் வெங்கடேசனின் தாயார் இந்திராஅம்மா என்பவர் பரம்பூர் ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் புதுக்கோட்டையில் இருந்து நேற்று இரவு சென்னைக்கு சென்ற அமைச்சர் விஜயபாஸ்கரை திருச்சி விமான நிலையத்தில் விட்டு விட்டு காரில் அவரது சொந்த ஊரான பரம்பூருக்கு வெங்கடேசன் சென்று கொண்டிருந்தார். அவர் சென்ற கார் திருச்சியில் கிளிக்குடி வீரபெருமாள்பட்டி அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென எதிர்பாராதவிதமாக புளிய மரத்தில் மோதி விபத்துக்கு உள்ளானது.
இந்த விபத்தில் அமைச்சரின் தனி உதவியாளர் வெங்கடேசன் மற்றும் கார் டிரைவர் செல்வம் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது