சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி : தமிழக அரசு

கரோனா வைரஸ் தடுப்பு காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் எல்லா வகையான தொழில்களும் முடங்கியுள்ளது. தற்போது நான்காம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சில துறைகளுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டது. ஊரடங்கு காரணமாக சினிமா சார்ந்த பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை போன்ற சினிமாவை சார்ந்து இருக்கும் மக்களின் அன்றாட வாழ்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், போஸ்ட் புரொடொக்‌ஷன் பணிகளுக்கு மட்டும் தமிழக அரசு, கடந்த சில நாட்களுக்கு முன் அனுமதி அளித்தது. 
இந்நிலையில், சின்னத்திரை படப்பிடிப்புகளை நாளை முதல் நிபந்தனைகளுடன் ன்ற நிபந்தனைகளை தமிழக அரசு விதித்துள்ளது. 

  • தடை செய்யப்பட்ட மற்றும் பொது இடங்களில் படப்பிடிப்புகளை நடத்தக்கூடாது.
  • உள்ளரங்க படப்பிடிப்புகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.
  • படப்பிடிப்பில் பங்கேற்கும் நடிகர், நடிகைகளைத் தவிர தொழில்நுட்ப கலைஞர்கள் முகக்கவசம் அணிய வேண்டும்.
  • சென்னையில் படப்பிடிப்பு நடத்த மாநகராட்சி ஆணையர், மாவட்டங்களில்  ஆட்சியர் அனுமதியை பெற வேண்டும்.
  • படப்பிடிப்பில் அதிகபட்சம் 20 பேர் பங்கற்கலாம். 

போன்ற நிபந்தனைகளை தமிழக அரசு விதித்துள்ளது.