தன்னார்வலர்கள் உதவ தடை இல்லை : தமிழக அரசு,தி.மு.க முறையீடுக்கு பதில்

பொதுமக்களுக்கு தன்னார்வலர்கள் உதவ தடை விதித்த தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் முறையீடு செய்யப்பட்டது. இதையெடுத்து திமுக அரசுக்கு இது குறித்து தமிழக அரசு  தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து உதவிகளை செய்யுங்கள் என்றே அறிவுறுத்தியுள்ளோம் தவிர தன்னார்வலர்கள் உதவ தடை விதிக்கப்படவில்லை. மேலும் யாரிடம் தொற்று இருக்கிறது அது எப்படி மற்றவர்களுக்கு பரவுகிறது என்பது தெரியாது என்பதால், நேரடியாக உதவிகளை மக்களிடம் வழங்காமல், பாதுகாப்பான முறையில் மாவட்ட நிர்வாகம் மூலம் உதவிகளை தன்னார்வலர்கள் செய்யலாம் என தமிழக அரசு கூறியுள்ளது.

நிவாரண உதவி செய்ய சம்பந்தப்பட்ட வருவாய் துறை அதிகாரிகளையும் அணுகலாம். அரசு அலுவலர்கள் மூலம் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணம் வழங்க ஏற்பாடு ஆட்சியர்களின் அனுமதியுடன் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தன்னார்வலர்கள் ஈடுபடலாம். அரசின் நோக்கம் உதவி செய்வதை தடுப்பது அல்ல நோய்த்தொற்று சூழ்நிலை கருதி பாதுகாப்பு நிவாரணம் தர வேண்டும் . தன்னார்வலர்கள் , அரசியல் கட்சியினர் நிவாரணம் வழங்குவதில் எந்த அரசியலும் செய்யவில்லை. மக்களுக்கு பாதுகாப்பான நிவாரணம் சென்றடைவதை உறுதி செய்ய அறிவுறுத்தியது, தவிர தடை விதிக்கவில்லை.

மு க ஸ்டாலின் , வைகோ, கே.எஸ் அழகிரி போன்ற தலைவர்கள் உண்மைக்கு புறம்பாக பிரச்சாரம் செய்கின்றன என தமிழக அரசு கூறியுள்ளது. நோய்களை தடுக்கும் உண்மையான நோக்கத்தை புரிந்துகொண்டு ஒத்துழைப்பு தர வேண்டும் என  அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.