வீட்டு வேலை பணியாளர்களுக்கான அனுமதி ரத்து : தமிழக அரசு

வீட்டு வேலை பணியாளர்களுக்கான அனுமதி ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரானா தொற்று தடுக்கும் வீதமாக மூன்றாம் கட்ட ஊரடங்கு மே 17 வரை நீடித்து இருந்தது. ஆனால் கொரானா தொற்று கட்டுபாடுக்குள் உள்ள பகுதிகளில் சில தளர்வுகள் அளித்தது. அதில் வீட்டு வேலை செய்யும் பணியாளர்கள் உரிய அனுமதி வாங்கி வேலைக்கு செல்லலாம் என்ற அனுமதி அளித்ததை தற்போது ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பொதுநலன் கருதி மே 17 ஆம் தேதி வரை வீட்டு வேலை செய்யும் பணியாளர்களுக்கு அளித்த அனுமதி ரத்து செய்யப்பட்டது. எனவே ஊரடங்கு முடியும் வரை தாங்கள் பணிபுரியும் வீடுகளுக்கு செல்லாமல் அவரவர் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தப்பட்டுள்ளது.