தமிழக அரசு அறிவிப்பு

நாளை முதல் அனுமதி தமிழகத்தில் 34 வகையான கடைகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஊரடங்கு உத்தரவால் தமிழகத்தில் உள்ள நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது.ஆனால் மே 3- ஆம் தேதிக்கு பிறகு 3 -ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.சில தளர்வுகள் மட்டும் இந்த சமயத்தில் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் நாளை முதல் அனுமதி தமிழகத்தில் 34 வகையான கடைகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.சலூன் கடைகள், ஸ்பா மற்றும் அழகுநிலையங்கள் இயங்க தடை தொடரும். விவரங்கள் இதோ…

 • டீ கடைகள் (பார்சல் மட்டும் )
 • பேக்கரிகள் (பார்சல் மட்டும் )
 • உணவகங்கள் (பார்சல் மட்டும் )
 • பூ,பழம்,காய்கறி மற்றும் பல சரக்கு கடைகள்
 • கட்டுமானப் பொருட்கள் விற்கும் கடைகள்
 • சிமெண்ட்,ஹார்ட்வேர், சானிடரிவேர் விற்கும் கடைகள்
 • மின்சாதன பொருட்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள்
 • மொபைல் போன் விருக்கும் மற்றும் பழுது நீக்கும் கடைகள்
 • கணினி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள்
 • வீடு உபயோக இயந்திரங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்கும் கடைகள்
 • மோட்டார் இயந்திரங்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள்
 • கண்கண்ணாடி மற்றும் பழுது நீக்கும் கடைகள்
 • சிறிய நகைக்கடைகள் (குளிர்சாதன வசதி இல்லாத கடைகள் )
 • சிறிய ஜவுளி கடைகள் (குளிர்சாதன வசதி இல்லாத கடைகள் )
 • மிக்ஸி,கிரைண்டர் பழுது நீக்கும் கடைகள்
 • டிவி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள்
 • பெட்டி கடைகள்
 • பர்னிச்சர் கடைகள்
 • சாலையோர தள்ளுவண்டி கடைகள்
 • உலர் சலவையகங்கள்
 • கூரியர் மற்றும் பார்சல் சர்வீஸ்
 • லாரி புக்கிங் சர்வீஸ்
 • ஜெராக்ஸ் கடைகள்
 • இருசக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் விற்பனை நிலையங்கள்
 • இருசக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள்
 • நாட்டு மருந்து விற்பனை கடைகள்
 • விவசாய இடுபொருட்கள் மற்றும் பூச்சி மருந்து விற்பனை கடைகள்
 • டைல்ஸ் கடைகள்
 • பெயிண்ட் கடைகள்
 • எலக்ட்ரிகல் கடைகள்
 • ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் விற்பனை கடைகள்
 • நர்சரி கார்டன்கள்
 • மரக்கடைகள் மற்றும் பிளைவுட் கடைகள்
 • மரம் அறுக்கும் கடைகள்