11.05.20 நடைமுறைக்கு வரும் கட்டுப்பாடுகள் : தமிழக அரசு

தமிழ்நாட்டில் கொரானா தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மை சட்டத்தின்கீழ் ஊரடங்கு உத்தரவு 24.03.20 முதல் அமலில் இருந்து வருகின்றது. கடந்த 2.5.20 அன்று தமிழ்நாடு அரசவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையிலும், மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவுரைகளின் படியும் பெருநகர சென்னை காவல்துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் பல்வேறு பணிகளுக்கு வரைமுறைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு முழுவதும் (நோய் கட்டுப்பாடு பகுதிகள் தவிர) கீழ்க்காணும் பணிகள் 11.5.20 திங்கள்கிழமை முதல் குறிப்பிட்ட நேரத்தில் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.

  • அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும். இதைத் தவிர்த்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும்.
  • பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பிற தனிக்கடைகள் காலை 10.30 முதல் மாலை 6 மணி வரை செயல்படும். இதைத் தவிர்த்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும்.
  • தமிழகம் முழுவதும் பார்சல் முறையில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை விற்பனையில் ஈடுபட டீ கடைகளுக்கு அனுமதி. தேனீர் கடைகளில் சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் மேலும் தினமும் ஐந்து முறை கிருமி நாசினி தெளித்து கடையை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். கடையில் வாடிக்கையாளர்கள் நின்றோ, அமர்ந்தோ எதுவும் உட்கொள்ள அனுமதி இல்லை. இதை முறையாக கடைபிடிக்க தவறும் கடைகள் உடனடியாக மூடப்படும்.
  • சென்னையை தவிர்த்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள வை 24 மணி நேரமும் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் இரவு 6 மணி வரை செயல்படும்.
  • பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்கள் 33 சதவீத பணியாளர்களுடன் காலை 10.30 முதல் மாலை 6 மணி வரை செயல்படும். பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதியை தவிர்த்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் அனைத்து தனியார் நிறுவனங்கள் 33 சதவீத பணியாளர்களுடன் காலை 10 முதல் மாலை 7 மணி வரை செயல்படும்.

அரசால் அறிவுறுத்தப்பட்ட தனிநபர் இடைவெளியை பின்பற்றவும் போதுமான கிருமிநாசினி பயன்படுத்திய பணிபுரிவதையும், பணியாளர் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணிபுரிவதையும், அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையான செயல்பாடு வழிமுறைகளை தீவிரமாக கடைபிடிப்பதையும் மாவட்ட ஆட்சியர்களும், மாநகராட்சி ஆணையர்களும், காவல் துறையினரும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அரசால் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட அனைத்துத் தரவுகளும் தடைகளும் மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து முழுமையாக கடைபிடிக்கப்படும்.