தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்குமா? – ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து காணொலி மூலம் மே 12-ம் தேதி முதல்வர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 24-03-2020 முதல் அமலில் இருந்து வருகின்றது. கடந்த 02-05-2020 அன்று தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையிலும், மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவுரைகளின்படியும், பெருநகர சென்னை காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் பல்வேறு பணிகளுக்கு வரைமுறைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டது. அரசால் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட அனைத்து தளர்வுகளும், தடைகளும் மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து முழுமையாக கடைப்பிடிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஊரடங்கை நீட்டிக்கலாமா? வேண்டாமா? மேலும் கொரோனா தடுப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்தும் அனைத்து ஆட்சியர்களிடம், முதல்வர் கருத்துகளை கேட்க ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உடன், கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ளும் ஒருங்கிணைப்பு குழுவுடனும் ஆலோசிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா சிகிச்சைக்கான சிறப்பு நிபுணர் குழுவுடனும் முதல்வர் ஆலோசனை நடத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.