மருத்துவர்களும் மற்றும் பிற களப்பணியாளர்களும் அச்சப்பட தேவையில்லை: முதல்வர்

மருத்துவர்களும் மற்றும் பிற களப்பணியாளர்களும் அச்சப்பட தேவையில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: மருத்துவர்களும் மற்றும் பிற களப்பணியாளர்களும், உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள களப்பணியாளர்களை இறைவனுக்கு நிகராக கருதவேண்டும்.

கொரோனாவால் இறந்த மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே நடந்ததுபோல் நடக்காமல் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு எடுக்கும். தன்னலம் கருதாமல் காக்கும் பணியில் ஈடுபட்டு இன்னுயிரை துறப்போருக்கு தகுந்த மரியாதை தாருங்கள் என கூறியுள்ளார். 

மேலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல் அடக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்போர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரித்துள்ளார்.