வட மாநிலத்தில் சிக்கி தவிக்கும் தமிழ்நாட்டு இளைஞர்கள்

குடும்ப சூழ்நிலைக்காகவும், வருமானத்திற்க்காகவும் வடமாநிலத்திற்கு வேலைக்கு சென்ற இளைஞர்கள் தற்போது கொரோன தொற்று பரவலால் காரணமாக வட மாநிலத்திலிருந்து வெளியேற முடியாமல் கடந்த 3 மாதங்களாக தவித்து வருகின்றனர். கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதால் வெளியில் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சாப்பாட்டுக்கும் வழியில்லாமல் தவித்து வருகின்றனர். தங்கள் கையில் இருக்கும் பணத்தை வச்சு தான் அன்றாட வாழ்க்கையை சிக்கனகமாக கடந்து வந்தார்கள். அருகில் உள்ள சமூக ஆர்வலர்கள் மூலமாக தான் மதிய உணவு கடந்த ஒரு வாரமாக கிடைத்தது வந்த நிலையில் தற்போது அதுவும் அவர்களுக்கு கிடைக்க தடையாக உள்ளது. முறைப்படி சொந்த ஊருக்கு திரும்ப தமிழ்நாடு அரசு மற்றும் மகாராஷ்டிரா அரசிடம் முயற்சி செய்தோம் அனைத்தும் தோல்வியுற்றது. தமிழ்நாடு அரசு அறிவித்த அனைத்து இணையதளம் மூலம் பதிவு செய்து பார்த்தோம் தற்போது வரை அதற்கு எந்த பலனும், பதிலும் இல்லை. இந்த வீடியோ பதிவு மூலம் தமிழ்நாடு அரசுக்கு சென்றடைய வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம். ( பதிவு செய்த நாள்: 13-05-2020. தொடர்புக்கு: இசக்கிமுத்து – 8940031177, ரஞ்சித் – 7548808029, பிரபாகரன் – 7373493938)