கொரோனா பணியின்போது மரணமடைந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தபடி 50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். தமிழகத்தில் பல மாவட்டங்களில் காலியாக உள்ள துணை ஆட்சியர் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினார்கள்
அதனை தொடர்ந்து தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில் இன்று (24.06.2020) புதன்கிழமை அனைத்து வட்டக்கிளைகளிலும் வருவாய் துறை அலுவலகங்கள் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி “பதாகை வைத்து போராட்டம்” மற்றும் “கருப்பு பட்டை அணிந்து போராட்டம்” அணிந்து போராட்டம் நடத்தினர்.
அதைபோல் நாளை மற்றும் மறுநாள் வருவாய் துறை அலுவலர்கள் அனைவரும் “கருப்பு பட்டை அணிந்து போராட்டம்” மற்றும் 26ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 1 மணி நேரம் முன்னதாக அலுவலகத்தில் இருந்து வெளிநடப்பு செய்து அனைத்து மாவட்ட/வட்ட தலைநகரங்களில் எழுச்சிமிகு “ஆர்ப்பாட்டம்” நடைபெற உள்ளது.
தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில் கீழ்கண்ட கோரிக்கைகள்:
கொரோனா நோய் பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள வருவாய் துறை அலுவலர்கள் நோய் தொற்றுக்கு ஆளாகி மரணமடைந்துள்ளனர் கொரோனா பணியின்போது மரணமடைந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தபடி 50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். திருச்சி மாவட்டம், தொட்டியம் உள்வட்டம், வருவாய் ஆய்வாளர் திரு.சேகர் அவர்கள் கொரோனா பணியின்போது விபத்தில் மரணமடைந்தது தொடர்பாக உயர்த்தப்பட்ட இழப்பீடு தொகை ரூ.50 லட்சம் மற்றும் அவரது குடும்பங்கள் ஒருவருக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும். மேலும் கொரோனா தடுப்புபணி மற்றும் நிவாரணப்பணிகளில் ஈடுபட்டு நோய் தொற்றுக்கு ஆளான வருவாய்த்துறை அலுவலர்கள் அவர்தம் குடும்பத்தினருக்கும் அரசு சார்பில் உயர் சிகிச்சை அளிக்கவேண்டும். நோய் தொற்றுக்கு ஆளான வருவாய் துறை அலுவலர்கள் பலர் தமிழக அரசு ஏற்கனவே அறிவித்த கருணைத் தொகை வழங்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் காலியாக உள்ள துணை ஆட்சியர் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும்.
தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள வருவாய்துறை அவர்கள் அனைவருக்கும் “N-95” முகக்கவசம், கையுறை மற்றும் சானிடைசர் உள்ளிட்ட தரமான தனி பாதுகாப்பு உபகரணங்கள் வேண்டும் (PPE) உடனடியாக வழங்கிட வேண்டும்
முதல்நிலை வருவாய் ஆய்வாளர் நிலையில் ஒருங்கிணைந்த பணிமுதுநிலை நிர்ணயம் செய்வது தொடர்பாக மாவட்டங்களில் பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இதன் காரணமாக பல மேல்முறையீடுகளும், நீதிமன்ற வழக்குகளும் ஏற்பட்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் மாண்பமை உயர்ந்திமன்றம் இதுகுறித்து விதிகளில் திருத்தம் மேற்கொள்ள ஆணையிடப்பட்டது. இதன்படி உடனடியாக அரசாணை வெளியிட வேண்டும்.
கடலூர் மாவட்ட வருவாய் துறை அவர்கள் மீது மாவட்ட நிர்வாகத்தால் எடுக்கப்பட்ட பாரபட்சமான துறைவாரி நடவடிக்கைகளை உடன் முடிவிற்கு கொண்டுவர வேண்டும்.
தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் உச்சத்தில் உள்ள நிலையிலும் பல்வேறு மாவட்டங்களில் பட்டா மாறுதல் ஆய்வு உள்ளிட்ட வழக்கமாக நடத்தப்படும் அனைத்து பணி முன்னேற்ற ஆய்வு கட்டங்கள் நடத்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், ஜீப்பு ஓட்டுநர் மற்றும் கிராம உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
அரசு ஊழியர், ஆசிரியர்களின் அகவிலைப்படி உயர்வு ரத்து, ஒப்படை விடுப்பு ஊதியம் இரத்து பொது வருங்கால வைப்புநிதி வட்டி குறைப்பு. விடுப்பு பயணச்சலுகை இரத்து, பணி ஓய்வு வயது உயர்வு. புதிய பணியிடம் உருவாக்க தடை உள்ளிட்ட ஊழியர் விரோத நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்து மேற்கண்ட அரசாணைகளை இரத்து செய்ய வேண்டும்