தமிழ்நாடு நாடார் பேரவையின் கொள்கை விளக்க கூட்டம் மார்ச் 1 ந் தேதி மாலை 5 மணிக்கு விருதுநகர் மேற்கு மாவட்டம் ராஜபாளையம் ஒன்றியம் மேலவரகுணராமபுரம் பெருந்தலைவர் காமராஜர் கலையரங்கத்தில் தலைவர் என் ஆர் தனபாலன் அவர்கள் தலைமையில் நடைபெற இருக்கிறது.

கூட்டத்திற்கான முன்னேற்பாடுகள் செய்ய பேரவையின் மாநில தலைமை நிலைய செயலாளர் எம் ஆர் சிவகுமார்,மாநில அமைப்பாளர் எஸ்.வி.ஆர் விஜய்மாரிஸ், மாவட்ட அமைப்பாளர் பேச்சியப்பன் ,பெருந்தலைவர் மக்கள் கட்சியின் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஜோசப் ஆரோக்கிய ராசையா,மாவட்ட அமைப்பாளர் சோலைசேரி ரமேஷ் ஆகியோர் மேலவரகுணராமபுரத்திற்கு நேரில் சென்று மகமை கட்டிடத்தில் ஊர் தலைவர் மற்றும் சமுதாய பெரியோர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி கூட்டம் நடைபெறும் மைதானத்தை பார்வையிட்டார்கள்.
