தமிழகத்தில் கேவலமான அரசாங்கம் உள்ளது

தூத்துக்குடி தமிழகத்தில் கேவலமான அரசாங்கம் உள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி பேச்சு

மத்திய மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் வி.வி.டி.சிக்னல் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சி.எஸ். முரளிதரன் தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். 

ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ். அழகிரி பேசுகையில்,
தவறானவர்கள் கையில் ஆட்சி போயிருக்கிறது என்பதற்காக காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
நாடு முழுவதும் கல்விக்காக மாணவர்கள் பெற்ற “கல்வி கடனை” வசூல் செய்து  கொடுக்கும் பணியை அனில் அம்பானியிடம் மத்திய அரசு கொடுத்துள்ளது.
ஆனால் பெரு முதலாளிகளுக்கு அவர்கள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்த தொகை மட்டும் 3 லட்சம் கோடி ரூபாய்.

கூட்டத்தின் ஒரு பக்கம்

இந்த மத்திய அரசின் திட்டங்கள் எதும் இல்லாத சாதாரான மக்களுக்கு கிடைப்பதில்லை. நாட்டிற்காக காங்கிரஸ் கட்சி செய்ததை எல்லாம் எடுத்துச்சொல்லவேண்டும்.

தமிழகத்தில் கேவலமான அரசாங்கம் உள்ளது. அமைச்சர்கள், தலைமை செயலர் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றுள்ளது.

ஆகவே, நாட்டை நல்வழியில் கொண்டு செல்ல காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் மீண்டும் அமையவேண்டும். அதற்கு நாம் உழைக்கவேண்டும் என்றார்.

காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் சஞ்சய் தத், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், வசந்தகுமார் எம்பி உள்பட பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.