குடும்ப அட்டை இல்லாத மூன்றாம் பாலினவர்க்கும் ரேஷன் பொருட்கள் கொடுக்க முடிவு – தமிழக அரசு

மாண்புமிகு அம்மாவின் அரசு கொரானா நோய் தொற்றினை தடுக்க பன்முக நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்துவரும் வேளையில், பொது மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் பல சீரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. குறிப்பாக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள், தெருவோர வியாபாரிகள், ஆட்டோ டாக்ஸி ஓட்டுநர்கள் ஆகியோருக்கு நிவாரண உதவியும் அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி வருகின்றது மூன்றாம் பாலினத்தவர்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள மாண்புமிகு அம்மாவின் அரசு அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதன் தொடர்ச்சியாக தற்போது குடும்ப அட்டை இல்லாத மூன்றாம் பாலினத்தவர்க்கு தலா 2 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் என அத்தியாவசிய பொருட்கள் கொண்ட தொகுப்பினை வழங்க மாண்புமிகு அம்மாவின் அரசு உத்தரவிட்டு உள்ளது. இதன் மூலம் குடும்ப அட்டை இல்லாத 4022 மூன்றாம் பாலினத்தவர் பயன்பெறுவர்.