கோவில்பட்டி சிறையில் உயிரிழந்த தந்தை – மகன் குடும்பத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண நிதி

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் காவல்துறையினர் தாக்குதலுக்கு உள்ளாகி பலியான வியாபாரிகள் குடும்பத்தினரை நேரில் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர்கே.எஸ்.அழகிரி ஆறுதல் தெரிவித்து 10 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் காவல்துறை தாக்கியதால் இறந்தனர் இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி சாத்தான்குளத்தில் நேரில் வருகை தந்து அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் தொடர்ந்து பத்து லட்ச ரூபாய் நிதி உதவிகளையும் வழங்கினார் இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கே எஸ் அழகிரி குற்றச் செயல் புரிந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு அரசு துணை போகக் கூடாது எனவும் காவல்துறையில் உள்ள சில கருப்பு ஆடுகளை அரசு பாதுகாக்க நினைப்பதால் காவல்துறையை சந்தேகக் கண்ணோடு கண்ணோடு பார்க்க கூடிய நிலை ஏற்பட்டுள்ளதுஎனவே காவல்துறையினர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார் இந்த சம்பவம் குறித்து தமிழக முதல்வரும் நாடகமாடி வருவதாக தெரிவித்தார் தொடர்ந்து இந்த வழக்கு குறித்து சிபிஐ விசாரணை நடத்துவதற்கு நீதிமன்ற அனுமதி பெற்று நடத்தப்படும் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளது இந்த வழக்கை திசை திருப்பவும் காலதாமதம் படுத்தவும் செய்யப்படும் நடவடிக்கை என தெரிவித்தார் இந்த சந்திப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் மயூரா ஜெயக்குமார் காங்கிரஸ் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்