தூத்துக்குடி தூய மரியன்னை தன்னாட்சி கல்லூரி கோலாகலமாக நடைபெற்ற தாய்மொழி தினம்…

20.2.20 அன்று தூத்துக்குடி தூய மரியன்னை தன்னாட்சி கல்லூரியில் காலை 11.30 மணிக்கு கல்லூரி கலையரங்கில் தாய்மொழி தினமானது கொண்டாடப்பட்டது. இறை வணக்கத்துடன் விழா ஆரம்பமானது. தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் அமலா அருளரசி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் அருட்சகோதரி ரோஸி அவர்கள் தலைமையுரை வழங்கினார். துணை முதல்வர் முனைவர் அருட்சகோதரி ஷிபானா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். மழை இன்னிசை அறக்கட்டளை தமிழ் இசை ஆய்வாளர் நா.மம்மது, பாடகர் இராசாபார்ட் இராசா, கீபோர்ட் இசை அமைப்பாளர் திரு குமரகுரு, தபாலா இசையமைப்பாளர் பாலன் போன்றோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று தமிழ்த்தின இசையால் தமிழ் மொழியின் இனிமையை உணர வைத்தார்கள்.

தமிழ் துறை பேராசிரியர் முனைவர் அ.ம.சோனல் அவர்கள் நன்றி உரை வழங்கினார்கள். தாய்மொழியின் சிறப்பினை உணர்த்தும் விதமாய் மாணவியர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் அருள் சகோதரி சாந்தி அவர்கள் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். நாட்டுப்பற்றுடன் விழா இனிதே நிறைவடைந்தது.