தமிழ்நாடு கலாசாரக் கண்காட்சி : நாசரேத் நைட்டிங்கேல் பள்ளி

நாசரேத் நைட்டிங்கேல் மழலையா் மற்றும் தொடக்கப்பள்ளியில் எஸ்.டி.ஏ. சபை போதகா் குருசையா தலைமையில் தமிழ்நாடு கலாசாரக் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியில் மாணவ- மாணவிகள் பழங்காலப் பொருள்கள், கைவினை பொருள்கள், பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள், கிராமிய உணவு வகைகள் ஆகியவற்றை செய்து அசத்தினர். மற்றும் மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியினை பொதுமக்கள் மற்றும் பெற்றோா்கள் கண்டுகளித்தனா். ஏற்பாடுகளை, பள்ளி முதல்வா் ஞானசீலி ஜான்சன் மற்றும் ஆசிரியைகள் செய்திருந்தனா்.