தமிழகத்தில் 132 பேருக்கு பன்றி காய்ச்சல்!!! பீதியில் மக்கள்….

கொரோனா அச்சத்தில் இருக்கும் நிலையில் கடந்த ஜனவரி 1 முதல் பிப்.1 ஆம் தேதி வரையிலேயே தமிழகத்தில் 132 பேருக்கு பன்றி காய்ச்சல் பரவி உள்ளதாகத் தெரிவித்துள்ளது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதனை குறித்து பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருப்பவர்களிடம் இருந்து 1 மீட்டர் தூரம் தள்ளியே இருக்க வேண்டும் மற்றும் சளி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவமனையை அணுக வேண்டும் என்றும் அதனைக் கட்டுக்குள் கொண்டு வர முழுவீச்சில் முன்னெச்சரிக்கை நடைபெற்று வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.