நாடு முழுவதும் தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் மதுபான விற்பனை முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி எட்டயபுரம் ரோடு 3ம் கேட் மேம்பாலம் கீழே உள்ள ஒரு லாட்ஜில் 144 தடையுத்தரவை மீறி மதுபானங்கள் விற்பனை செய்வதாக மத்தியபாகம் போலீசாருக்கு தகவல் கிடைத்ததையொட்டி சப் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் சம்ப இடத்திற்கு சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள். சோதனையில் சாக்குபையில் இருந்த 744 மதுபான பாட்டில்கள்களையும், மதுபானம் விற்ற பணம் ரூ. 2 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர். இது சம்பந்தமாக லாட்ஜ் உரிமையாளர் திலக் சந்திரன் (73), பாட்டிலை விற்று கொண்டிருந்த கன்னியாமுத்து (40) ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
