லோடு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார் : அமைச்சர் கடம்பூர் ராஜு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு. கடம்பூர் செ.ராஜு அவர்கள் தனது சொந்தப் பணத்திலிருந்து லோடு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அரிசி, பருப்பு மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார். அருகில் வட்டார போக்குவரத்து அலுவலர் திரு.சந்திரசேகரன், முக்கிய பிரமுகர்கள் திரு.அய்யாத்துரை பாண்டியன் திரு. விஜய பாண்டியன் ஆகியோர் உள்ளனர்.