முன்னாள் சாத்தான்குளம் சட்டமன்ற உறுப்பினர் ராணிவெங்கடேசன் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கல்

முன்னாள் சாத்தான்குளம் சட்டமன்ற உறுப்பினர் ராணிவெங்கடேசன் சார்பில் நிவாரண பொருட்கள்

சாத்தான்குளம் வட்டாரத்தில் அரசூர், தச்சன்விளை,அதிசயபுரம்,சாஸ்தாவிநல்லூர், சுண்டங்கோட்டை, பெரியதாழை, செட்டிவிளைஆகிய கிராம மக்களுக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பாக முன்னாள் சாத்தான்குளம் சட்டமன்ற உறுப்பினர் ராணிவெங்கடேசன் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

முன்னாள் சாத்தான்குளம் கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் லூர்துமணி, ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் வர்க்கீஸ் தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் மகேந்திரன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணைத் தலைவர் டாக்டர் சிங்காரவேல், தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணைத்தலைவர் சங்கர், தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் மீனவரணி தலைவர் பெரியதாழை சுரேஷ், முன்னாள் வட்டார காங்கிரஸ் தலைவர் நாசரேத் சாரதி முன்னிலையில் 55 பேருக்கு ஒரு நபருக்கு ரூ 650 மதிப்புள்ள மளிகை பொருள்கள் வழங்கப்பட்டது.

இதில் அதிசயபுரம் உதயமணி, மாணிக்கராஜ், ஆசிரியர் ஜோசப் ததேயுஸ்ராஜா, மரியசெல்வஜெகன், மைக்கில் எப்ரேம், பெரியதாழை ஜான்எல்ஜியூஸ், பச்சைவேல், சிவானந்தன், பாஸ்கர், அந்தோணிராஜன் கலந்து கொண்டனர். அரசூர் கிராம தலைவர் சிவா(எ) சுப்பிரமணியன் நன்றி கூறினார்.